அவளின்காத்திருப்பு

அவளின்காத்திருப்பு

காத்திருப்புகள் அழகானவை,

காத்திருப்புகள் அர்த்தம் மிக்கவை,

காத்திருப்புகள் ஆறுதல் அளிப்பவை,

காத்திருப்புகள் ஆழமானவை,

காத்திருப்புகள் நிறைந்ததுதான் வாழ்க்கை.

காத்திருப்புகள் சோர்வுற்ற வாழ்வை சுவாரசியமாக்குகின்றன.

 அவை எதிர்பார்ப்புகளை அளிக்கின்றன. அவை உள்ளங்களை வாழச் செய்கின்றன.

காத்திருப்புகள் காலங்களை கடத்துகின்றன. அவை நம்பிக்கையோடு நாட்களை நகர்த்தவல்லன…

அவள் காத்திருக்கிறாள். அவளுடன் அவளின் அன்பும் காத்திருக்கிறது….

காத்திருப்புகள் எங்குதான் இல்லை?

பெண்மையே காத்திருப்பின் ஒரு உருவம் தானே….

கன்னியவள் தன் காதல் கைகூட காத்திருப்பதில்லையா?

மங்கையவள் மணமேடையில் மாமனவன் மடிசேரக் காத்திருப்பதில்லையா?

தாலி கட்டிய நாள் முதல் தாமதமின்றிக் கருதரித்துத் தாயாக துடிக்கும் தாரமவள் காத்திருப்பதில்லையா?

பத்துமாதம் கருவில் தாங்கி பவ்வியமாய்க் குழந்தையைக் காண பதுமினியவள் காத்திருப்பதில்லையா?

கண்ணூறு நாவூறு கஷ்டம் வந்து தீண்டாது கண்ணெனப் பொத்தி வைத்த மைந்தனின் காகிதத்துக்காய் கந்தலுடுத்தியவள் காத்திருப்பதில்லையா?

கடல் தாண்டிச்  சென்ற கணவனின் காலடிச் சத்தம் கேட்கும் வரையில் கதவடியில் கனியவள் காதலோடு காத்திருப்பதில்லையா?

காத்திருப்புகள் இனிமையானவைதான்…

காதலோடும் கனவுகளோடும் காத்திருக்கும்போது, காத்திருப்புகள் மேலும் இனிக்கின்றன.

காலங்கள் கடந்தாலும் காத்திருந்த கனமான நாட்கள் கடைசிவரை தொடரும் கசப்பும் களிப்பும் கலந்த காவியமாக…. என்றும் மனதில் ஒழியா ஓவியமாக…

Rtr. Safia Sirajudeen

Share this content:

Leave a Reply

Your email address will not be published.