இலங்கையின் கல்வி முறையின் குறைபாடுகளின் தாக்கம்.

கல்வி என்பது ஒரு மனிதனின் பிறப்பலிருந்து இறப்புவரை தொடர்ந்து செல்வதும் அவனது வாழ்வில் முக்கியமான ஒன்று என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். இலங்கையானது அனைத்து வளங்களை கொண்ட நாடாக காணப்படினும் முன்னேற்றத்தை கண்டிராததற்கு பிரதான காரணமாக காணப்படுவது இலங்கையின் கல்வியின் பல குறைபாடுகளாகும். எமது நாட்டில் அதிகளவான கல்வியானது ஏட்டுக் கல்வியும் புத்தகங்கள் ஊடான கல்வியாகவும் காணப்படுகின்றதே தவிர ஒவ்வொரு பிள்ளையினதும் சுயதிறனை வெளிக் கொண்டுவந்து அப்பிள்ளையின் எதிர்காலத்தை நவீன உலகிற்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கான ஒரு சிறந்த கல்வி முறைமையை இலங்கை ஏற்படுத்தவில்லை என்பது பல காலமாக காணப்படுகின்ற குறைபாடாகவே உள்ளது.
இலங்கையினைப் பொறுத்தவரையில் ஆரம்பக் கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி அதற்கும் மேலாக தொழிற் கல்வி, முறைசாராக் கல்வி போன்றன நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இருப்பினும் இக் கல்வி முறையானது இலங்கையின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதில் எந்தவிதமான பாரியளவு பங்களிப்பினை செய்யவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை.
ஆரம்பக் கல்வி என்பது ஒரு பிள்ளையின் எதிர்காலத்தை தீர்மானப்பதற்கு இன்றியமையாதது ஆனால் எமது நாட்டின் கல்விமுறைமையானது ஆரம்பக் கல்வியிலேயே பிள்ளைகளை பரீட்சைக்கு தயார்செய்யத் தொடங்குகின்றார்களே தவிர தமது திறன்களை, திறமைகளை பிள்ளைகள் இனங்காண எமது கல்வி இடமளிக்கவில்லை. நவீன தொழிநுட்ப மாற்றத்திற்கு ஏற்ற கல்விமுறையானது இலங்கையில் இல்லை என்பதே உண்மை. ஆசியாவிலே அதிக கல்வி கற்றவர்கள் (92%) கொண்ட நாடாக இருந்தும் கல்வியியியல் ரீதியான முன்னேற்றம் இலங்கையில் இல்லை. இன்றுவரை அபிவிருத்தி அடைந்துவரும் நாடாக கூறப்படுவதற்கும். இலங்கையின் வளங்கள் ஒழுங்காக முகாமை செய்யப்படாமைக்கும் மிகப் பிரதான காரணம் கல்விமுறைமையின் அத்திவாரம் முதல் அனைத்திலும் காணப்படும் குறைபாடுகள் ஆகும்.
ஒருநாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தொழில்துறை , கைத்தொழில், தொழிநுட்பத் துறையின் பங்கு முக்கியமானது. அத்தகைய தெழில்நுட்ப ரீதியான ஒரு கற்கைநெறி அடிப்படையை இலங்கையில் ஒரு பிள்ளை தொழிநுட்பக் கல்லூரிகளின் ஊடாக 18.
வயதிற்கு பிறகு ஓரளவு அறியும் பொழுது அதனால் எவ்வித முன்னேற்றத்தையும காணமுடியாது. ஏனைய வளர்ந்துவரும் நாடுகள் தொழில்நுட்பத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இலங்கை சிறிதளவேனும் கொடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.
அவ்வாறாக தொழில்நுட்பரீதியான கல்வியினை தற்போது அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த முயன்றாலும் அதனைக் கற்பிக்கும் திறன் கொண்ட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறையுண்டு. எமது நாட்டில் வரலாறு, சமய பாடங்களுக்கு; முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு நவீன கல்வி முறைமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தகவல் தெடர்பாடல் அறிவின்மை, சவாலுக்கு முகம்கொடுக்க கூடிய ஆற்றல் வளர்க்காமை என்பனவும் பாரிய குறைபாடாக காணப்படுகின்றது.
இலங்கையானது ஆரம்பக் கல்வியில் இருந்து பல்கலைக்கழக கல்விவரை இலவசக் கல்வியினை வழங்கி அரசாங்கமே பட்டாதாரிகளை அதிகம் உருவாக்குவதனால். அனைத்துப் பட்டதாரிகளும் அரச வேலைவாய்ப்பிற்காக காத்திருப்பதனால் வேலையற்றோர் வீதம் அதிகரித்து உள்ளது. ஒரு வட்டத்திற்குள் சுருக்கிவிடும் கல்விமுறையே இங்கே பின்பற்றப்படுகின்றது.
அதுமட்டும் அல்லாமல் தற்காலமாக ஏனைய காலங்களை விட இலங்கையின் கல்வியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மாகாணரிதீயாக, தேசிய ரீதியாக பார்க்கின்ற பொழுதும் கா.பொ.த சாதாரணதரம் மற்றும் கா.பொ.த உயர்தரம் போன்றவற்றின் பெறுபேறுகள் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது பெறும் வீழ்ச்சி கண்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
ஆரம்பக் கல்வியில் இருந்து உயர் கல்விவரை பரீட்சைக்கு தயார் ஆகும் கல்விமுறைமையாக இருக்கின்றதே தவிர திறன்களை வெளிக்கெண்டுவர்ந்து புத்தாக்கம், கண்டுபிடிப்புக்களை ஊக்குவிக்கும் கல்வி முறையாக காணப்படவில்லை. எமது நாட்டை பொறுத்தவரையில் சிறுவதிலிருந்தே கல்வி என்பது சுமையாக வாழ்நாள் பூராகவும் செல்வதற்கு வழிவகுக்கின்றது. அதாவது திறன்களுக்கு ஏற்ற தளத்தை இலங்கை கல்வி முறைமை வழங்கத் தவறிவிட்டது.
இலங்கையை பொறுத்தவரையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்கின்ற மும்மொழி காணப்படுகின்ற பொழுதிலும். மும்மொழியானது அனைத்துப் பாடசாலைகளிலும் கற்றுக்
கொடுக்கப்படுவதில்லை என்பது நிதர்சனமான உண்மை. சில பாடசாலைகளில் பாடத்தை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. அதனோடு கா.பொ.த சாதாரணதரம் வரை பிள்ளை தனது எதிர்காலக் கல்லியினை தொடர வாய்ப்பு இல்லை. கா.பொ.த உயர்தரம் பின்னர் கூட 4 துறை தெரிவுகளே காணப்படுகின்றன. இது மாணவர்களின் திறன்களை வெளிக்கொண்டுவர வாய்ப்பினை தடுத்து மாணவர்களது மனநிலையை 4 துறைசார்ந்தே சிறு வயதில் இருந்து சிந்திக்க வைக்கின்றது.
கல்வி கற்பதற்கு சூழல் இன்றியமையாத விடயம். கற்றல் சூழல் கூட அதிகமான பாடசாலைகளில் ஒழுங்காக இல்லை, இவை கல்வியில் மாணவர் சிந்தனையை மழுங்கடிக்கும். இலங்கையில் தகவல்தொடர்பாடல் விருத்தி போதியளவு இல்லை. போதிய தொழில்நுட்ப அறிவினை ஏற்படுத்தும் கல்வியினை அமுல்படுத்தாமை, திறமைகளை ஒரு வட்டத்திற்குள் சுருக்கியமையால் புதிய தோன்றல்கள் இல்லாமை, நவீனத்துவ முறைக்கு ஏற்ற கல்வி அணுகுமுறைகள் காணப்படாமை போன்ற பல குறைபாடுகள் காணப்படுகின்றன.
இவ்வாறான நிலையினை இலங்கை மாற்றி ஏனைய நாடுகள் போனற ஒரு கல்வி முறையினை அமுல்படுத்தாமல் இருந்தால் எத்தனை தசாப்தங்கள், நூற்றாண்டுகள்கழிந்தாலும் இலங்கையின் நிலை பொருளாதார ரீதியாகவோ, அபிவிருத்தி ரீயாகவோ எந்த மாற்றத்தையும் காணாது என்பது திட்டவட்டான உண்மை.
Rtr. Jasi Pakeerathan
Share this content:
1 COMMENT