இலங்கையின் அனுராதபுரத்தைச் சோழ வம்சத்து அரசனான எல்லாளன் ஆண்டு வந்தான். மக்களின் குறைகளைக் கண்டறிய அவனது அரண்மனையின் வாயிலில் ஒரு மணியைக் கட்டிவிட்டான். அது ஆராய்ச்சி மணி என மக்களால் மதிக்கப்பட்டது. இதனால் மக்களின் குறைகளை அரசன் தீர்த்து வைத்து வந்தான். மற்றும் இதனால் நகரவாசிகளும் பயனடைந்தனர். இவ்வாறு சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் திடீரென்று ஆராய்ச்சி மணி ஒலிக்கும் சத்தம் கேட்டு முதலமைச்சர் வாயில் வந்து பார்த்தார். அங்குப் பசுவொன்று மணியை அடித்துக் கொன்று நிண்டது. ஆகவே அவர் காவலாளிகளை அனுப்பி பசுவின் துக்கத்திற்கான காரணத்தைக் கண்டறிந்தார். இளவரசன் விளையாட்டிற்காக அரண்மனை தேரினை ஒட்டி சென்ற தருணத்தில் தேர்க்காலில் அந்த பசுவின் கன்று சிக்குண்டு இறந்து போயிற்று. இதனை அந்த அமைச்சர், மன்னர் அறியாது மறைத்துவிட எண்ணினார். ஆனால் எவ்வாறோ அந்த செய்தி மன்னன் செவிகளை எட்டிவிட்டது. அதனை அறிந்த மன்னன் பசுவின் கன்றிற்கு நடந்ததை போன்றே தன் மகனுக்கும் நடக்க வேண்டும் என நீதி வழங்கினார். அதற்கு அந்த அமைச்சர் "ஒரு சிறுவனின் குறும்புத்தனத்தால் ஒரு கன்று பலியானது. அதற்காக இந்த நாட்டின் எதிர்கால இளவரசனையே…