ஆன்மாவின் அழுகை

ஆன்மாவின் அழுகை

ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை வாசுவின் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து  சிங்கராஜ வனத்திற்கு சுற்றுலா ஒன்று செல்ல தயாரானார்கள். வாசுவின் காரியாலயத்தில் ஒரு கிழமை விடுமுறை என்பதனால் அவர்கள் சிங்கராஜ வனத்தில் தங்கி விடுமுறையை கழிக்க எண்ணம் இட்டார்கள். எனவே அனைவரும் தயாரானது போல் அவர்கள் அவர்களது தேவையான அனைத்துப் பொருட்களை ஆடை உணவு உட்பட அனைத்தையும் எடுத்துக் கொண்டு சுற்றுலா செல்வதற்கும் தயாராகி வெளியேறினார்கள். பின் அவர்கள் சிங்கராஜ வனத்தை சென்றடைந்து அங்கு ஒரு விடுதியை தேர்ந்தெடுத்து அதில் தங்குவதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொண்டு சுற்றுலாவை கழிக்க ஆரம்பித்தார்கள்.

சுற்றுலாவின் முதல் நாள் என்பதால் அவர்கள் அனைவரும் முதல் நாளில் அவர்களது பொருட்களை அடுக்கி வைத்தல் உணவுகளை தயாரித்து விடுதியில் அவர்களுக்கு தேவையான சுத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். எனவே அன்று இரவு அனைவரும் பகல் முழுவதும் வேலை செய்து களைப்பானதால் அனைவரும் சேர்ந்து ஓய்வு எடுப்போம் என்று எண்ணி அவரவர்களுக்குரிய படுக்கை அறைகளில் நித்திரை கொள்ள ஆரம்பித்தனர்.

வாசுவின் மகளான சுசிக்கு நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென ஒரு முழிப்பு வந்தது. புதிய இடம் என்பதால் அவளுக்கு சீக்கிரம் நித்திரை வரவில்லை எனவே படுக்கை அறையில் விழித்திருந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள். பின் யாரோ ஒரு பெண் அழுவது போன்ற குரல் அவளது  செவிகளை வந்தடைந்தது. மனப்பிரம்மையாக இருக்குமோ என்று நினைத்து அவள் அதை பொருட்படுத்தவில்லை. ஆனால் சற்று நேரத்தில் மீண்டும் அந்த அழுகை ஓசை கேட்டது.

பின் யார் அழுவது என்பதைச் சோதிப்பதற்காக அவள் எழுந்து  சென்றாள்.  பின் அந்த விடுதியில் பாவனைக்கு எடுக்கப்படாத ஒரு அறை இருப்பதை கவனித்தால். அந்த அறைக்கு செல்லும் முன்னே அறையின் கதவு திறந்தது அந்த அழுகை ஓசையும்  அதிகரித்தது. பின் சுசி அந்த அறைக்குள் நுழைய முற்படும்போது தாயார் வந்து “இங்கே என்ன செய்கிறாய் போய் சென்று உறங்கு உனக்கு அங்கு உறக்கம் வரவில்லை என்றால் நானும் உன்னுடன் வந்து உறங்கிக் கொள்கிறேன்” என்றாள். தனக்கு அழுகை ஓசை கேட்டதை பற்றி சுகி அவளது தாயாரிடம் கூறவில்லை பின் இருவரும் உறங்கினார்கள் இரவும் கழிந்தது பொழுதும் விடிந்தது. இரண்டாவது நாள் வாசுவின் குடும்பத்தினர் அனைவரும் சிங்கராஜ வனத்திற்குள் அவர்களது சுற்றுலாவை ஆரம்பித்தனர் சிங்கராஜ வனத்தின் ஒரு சில பகுதிகளை அன்று கண்டு கழித்து வந்தனர். பின் இரவு அவர்கள் விடுதியை வந்தடைந்தனர்.

நேற்று இரவு நடந்தது போல மீண்டும் சுஜிக்கு அந்த அழுகை ஓசை கேட்டது அதை எங்கிருந்து வருகின்றது என்பதை பார்ப்பதற்காக அந்த அறையை நோக்கி சென்றாள்.

அறைக்குள் சென்று சுசி அங்குமிங்கும் பார்த்தாள் ஆனால் ஒன்றும் இருக்கவில்லை இருந்தாலும் அந்த அழுகை ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது.

என்ன நடக்கிறது என்பதை அறியாத சுசிக்கு இப்போது மனதிற்குள் பயம் தொற்றிக் கொண்டது,வியர்வை போட ஆரம்பித்தது.

தன்னை சுற்றி மர்மமாக ஏதோ நடக்கிறது என்பதை உணர ஆரம்பித்தாள் சுசி. அங்கே இருக்கக்கூடாது உடனே வெளியேற வேண்டும் என்று நினைத்த சுசி கதவை நோக்கி செல்லும்போது தானாகவே அந்த கதவு மூடப்பட்டது. கதவு மூடப்பட்டதும் சுற்றி இருந்த அறை முழுவதும் இருட்டாக, அவளுக்குள் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்த சுசி ஒரு பத்து பதினைந்து நிமிடங்களுக்கு பின் அந்த அறையிலிருந்து வெளியே வந்து தனது படுக்கை அறைக்கு சென்று நித்திரை கொண்டாள்.

பின் ஒரு 5 நாட்களாக சுசியின் நடவடிக்கைகள் எதுவும் சரி இல்லை என்பதும் சுசி சுசியாக இல்லை என்றும் அவர் யாரையோ போலவும் அவளுக்குள் ஏதோ ஒரு நடத்தை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது எனவும் அவளது பெற்றார்கள் உணர்ந்தனர்.

அனைவரையும் பயமுறுத்தும் வண்ணம் அவள் நடந்து கொள்கிறாள், மற்றும் அவள் தனியாக இரவு நேரங்களில் வெளியேறுகிறாள். தடுக்க நினைப்பவர்களை தாக்க முற்படுகிறாள். இதை கவனித்துக் சுசி குடும்பத்தினர்கள் அவளுக்குள் ஏதோ ஒரு ஆன்மா இருப்பதை உணர்ந்தனர் மேலும் அவளது உடல் அவளது கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதையும் அவர்கள் உணர்ந்தார்கள்.

பின் உடனடியாக ஆவிகள் ஓட்டும் ஓர் இடத்திற்கு சென்று அவளது நிலைமை பற்றி கூறி உடனடியாக இதற்கு ஏதேனும் சிகி்ச்சை வேண்டும் என்பதை உணர்ந்த அவர்கள் உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். பின் அவளுக்கான சிகிச்சைகள் நடந்து கொண்டிருந்தன அந்த சிகிச்சையின் பலனாக சுசியின் உடலிலிருந்த அந்த ஆன்மா  வெளியேற்றப்பட்டது பின் அந்த ஆன்மாவிடம் அவர் அந்த ஆன்மா ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறது என்பதை பற்றி விசாரிக்க முனைந்தனர்.

அவளும் அவளது காதலனும் திருமணம் செய்துகொண்டு ஒரு வாரத்தில் சுற்றுலாவாக இந்த சிங்கராஜ வானத்திற்கு வந்ததாகவும் வந்த நேரத்தில் இரண்டு நாட்கள் கழித்து ஒரு குடிகாரக் கும்பல் இவர்களை அவதானித்து பின் அவனது காதலனைக் கொன்றுவிட்டு இவளையும் பாலியல் சர்ச்சைக்கு உட்படுத்தி கொன்றுவிட்டு இந்த விடுதிக்கு உள்ளேயே அவர்களை யாருமறியாமல் புதைத்து விட்டு.

இது தொடர்பான செய்திகள் வெளிவராமல் பல அரசியல்வாதிகளின் உதவிகள் அவர்கள் இன்று தப்பித்து கொண்டிருக்கின்றார்கள்” என்றது.

“பல வருடங்களாக காதலித்து பிரச்சனைகளை சந்தித்து இறுதியில் நாம் திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்த நாள் முதல் நாம் பல திட்டங்களை போட்டோம் இருந்தாலும் இதுபோன்ற பெண்கள் மீது பேராசை கொண்டவர்கள் இந்த பூமியில் இருக்கும் வரை நம்மால் இவற்றை செய்ய முடியாது இருக்கின்றது. இந்த குடிகாரர்கள் வேறு யாரும் இல்லை இந்த சிங்கராஜ வனத்தில் வேலை செய்யும் ஆட்கள் தான் இவர்கள் இங்கு தான் இருக்கின்றார்கள். இருந்தாலும் இவர்களை தாக்குவதற்கு இவர்களைப் பற்றி கேள்வி கேட்பதற்கு நம்மை பற்றி விசாரிக்க யாரும் முன்வரவில்லை எனவே தான் அவர்களை பழிவாங்க வேண்டும் என்று நான் நினைத்தேன் என்று இந்த ஆன்மா கூறியது.

அதற்கு ஏன் நீ சுஜியை தேர்ந்தெடுத்தாய் வேறு வழிகளில் அவர்களை தாக்கிஇருக்கலாமே என்று அவர்கள் கேட்டார்கள் அதற்கு அந்த ஆன்மா வாசு என்பவர் ஒரு சிறந்த வழக்கறிஞர் என்றும் அவரிடம் இந்த குற்றம் சென்றிருந்தால் அவர் வழக்கை தீர விசாரித்து அவர்களுக்கு உரிய தண்டனைகள் எடுத்து வழங்குவார் என்று நான் நம்பிதான் அவரின் மகளின் ஆன்மாவுக்கு நான் சென்றேன்” என்றது அந்த ஆன்மா.

ஆன்மாவாக இருந்தாலும் காதலனை பிரிந்த துயரத்தில் அந்த ஆன்மா அவ்வாறு நடந்து கொண்டது  அவர்கள் பழிவாங்க நினைத்து கூட குற்றமில்லை என்று கருதியவர்கள் வாசு மூலமாக அந்த குற்றவாளிகளுக்கு தண்டனை எடுத்துக் கொடுத்தார்கள் பின் அந்த ஆன்மாவும் நிரந்தரமாக அதன் புதைகுழியில் வசிக்க ஆரம்பித்து .பின்னர் விடுதியில் நடந்த அனைத்து மர்மமான சம்பவங்களும் அன்றுடன் நிறைவுபெற்றது.

Rtr. சிராபா சிந்தீக்

Share this content:

Leave a Reply

Your email address will not be published.