தெகிவளை மிருகக்காட்சிச்சாலையில் ஓர் அமானுசியக் கதை
![](https://i0.wp.com/rotaractarts.com/wp-content/uploads/2022/10/The-Ghoul-Game-3-2-scaled.jpg?fit=2560%2C1280&ssl=1)
அது ஒரு அழகிய நாள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணம் சிறிதாவும் றோசனும் ஒன்றாக சென்ற வளியில் அவர்கள் மனமானது ஒரு சந்தோசமான இடத்தை தேடி அலைந்தது மிருகங்களுடன் உரையாட ஆசைப்பட்டனர் அதற்காக கொழும்பில் நின்றபடியினால் தெகிவளை மிருக்ககாட்சிச்சாலையை பார்வையிடும் அவாவுடன் ஒரு துவிச்சக்கர வண்டியினை றோசன் செலுத்த சிறிதா முன்பக்கம் அமர்ந்து மிருகக்காட்சிச் சாலையை அடைந்தனர். இருவரும் இணை பிரியாத நண்பர்கள். இருவருமாக உள்ளே நுழைந்தனர் இதற்கு பிறகுதான் அவர்கள் வாழ்வு திகிலூட்டும் கதையாக மாறியது. இருவருமாக நிறைய விடயங்களை பார்த்துக்கொண்டும் உரையாடிக்கொண்டும் கடல்வாழ் உயிரினங்கள், ஊர்வன, பறவைகள் போன்ற ஒவ்வொரு பிரிவாக பார்த்துக்கொண்டு வரும் போது வழிகாட்டி எண்ணை கவனிக்காது தாங்கள் வந்த பாதையை தவறவிட்டு வேறுபாதையால் சென்றுவிட்டனர். நேரமோ மாலை 6 மணியை கடந்து விட்டது அதுவரை அவர்களுக்கு தெரியாது தாங்கள் பாதையை தவறவிட்டது.
திடிரென ஒரு பயங்கரமான சத்தம் சிறிதாவுக்கு மட்டும் கேட்டது அலறினாள், கத்தினாள் ஆனால் றோசன் எதுவும் தெரியாதது போன்று சிறிதாவை பார்த்தான். சிறிதா ஏதோ பயங்கர ஒலி கேட்டதாக கூறினாள். அவன் தனக்கு எதுவும் கேட்கவில்லையே என கூறினான். அதற்கு பிறகே சிறிதா நேரத்தை பார்த்தாள் தாங்கள் வழி தவறிவிட்டதையும் உணர்ந்தாள்.ஆனால் றோசன் இடம் தெரிவிக்கையில் றோசன் முகமானது விறைத்து வேர்த்துப்போகி இருந்தது. உடனே றோசனை உலுப்பினாள், அவன் கவனத்தை திருப்ப முடியவில்லை றோசன் பார்த்த பக்கம் திரும்பிப்பார்க்கையிலே அவளுக்கு பெரும் அதிர்ச்சியுடன் பயத்தை தரும் அமானுசியம் ஒன்றை பார்த்தாள். அவளுக்கு எதிரே ஒரு மரத்தில் றோசன் தலைகீழாக தொங்கியவாறு ஒரு கால் இல்லாத தலையில்லாத சிங்கத்தை கடித்து குதறிக்கொண்டு இருந்தான். றோசன் அங்கு என்றால் தன் அருகில் நின்றது யார் என்று திரும்பிப்பார்ப்பதற்கு உள்ளே அவ்வுருவத்தின் தலையை காணவில்லை.
நிசப்தமான யாருமில்லாத இருள் சேர்ந்த பிரதேசமாக மிருகக்காட்சிச்சாலையில் திரும்பிப் பார்க்காமல் ஓடத்துவங்கினாள் அவள் பார்க்கும் இடம் முழுவதும் இருளாகியது. சிங்கங்கள் பிரிவில் இருந்து நீர் யானைகள் பிரிவிற்குள் அழுதவாறே உதவி உதவி…. ஏன்று கூக்குரல் இட்டே ஓடிவந்துவிட்டாள் மனதின் நீங்காத பயம் றோசன் அவ்வாறு நின்றது தன் நண்பனை தேடி மீண்டும்செல்ல மனம் துடித்தது. அவளுக்குள் பல கேள்விகள் நான் வரும் போது வெளிச்சமாக இருந்த இடம் எல்லாம் எவ்வாறு இருள் ஆனது அந்த அமானுசியம் என்ன? அந்த பயங்கர ஒலி தனக்கு மட்டும் எவ்வாறு கேட்டது தன்னுடன் வந்த றோசன் என்னவானான்? விடை தெரியாமல் முளித்தாள். ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து இருந்து. ஆனால் அங்கு இருந்த நீர்யானைகள் தீடிரென இவள்; பின்னால் வந்து நின்றது. செய்வது அறியாது திகைத்தாள் .இதயத்தின் வேகம் வெகுவாக அதிகரித்தது நீர்யானைகள் நடுவில் விலகின அங்கிருந்து அவளது ஆருயிர்த் தோழன் உருக்குலைந்து அலங்கோலமாக இவளைப் பார்த்த வண்ணம் வந்து கொண்டிருந்தான்;. அவனுக்கு பின்னால் ஆண் பேய்கள் கால் இல்லாமல் இவளை நெருங்கி வந்தது. இதைபார்த்த அவள் விழிநீர் சிந்த இறுகக் கண்ணை மூடிக்கொண்டு மரத்தை பிடித்தால் இவளது கையில் ஒரு யேசுவின் சிலுவை மரத்தில் இருந்து அகப்பட்டது. அதை இறுகப் பற்றிப் பிடித்து அவ் அமானுசியங்களுக்கு முன் காட்டினாள் அவை நொடிப் பொழுதில் காணாமல்போகின அந்த நீர் யானைகள் உட்பட. திரும்பிப்பார்க்காமல் சிலுவையின் வெண்ணிற ஒளியில் ஓடினாள். தான் தவறவிட்ட இடத்தை அடையாளம்கண்டாள்.அந்த நிசப்தம் பொருந்திய இரவில். அதில் கண்டதை பார்த்து அவள் திகைத்துப் போனாள். அங்கு இறந்து பேயாக திரிந்த அவனது ஆருயிர்த் தோழன் உயிருடன் சிறிதா சிறிதா என ஓலமிட்டுக்கொண்டு இருந்தான். இதை பார்த்த அவள் அமைதியாக நின்றாள்.ஏன் எனன்றால் இவளது பயமும் தீரவில்லை அந்த நிசப்தமும், இருளும் மாறவில்லை இது உண்மையிலே தன்நண்பன் றோசன் தானோ? இல்லை என்றால் அந்த அமானுசியம் ஓ என்ற குழப்பம் அவள் மனதை விட்டு அகலவில்லை. செய்வது அறியாது திகைத்தாள். தான் வைத்திருந்த சிலுவையை அவனுக்கு தெரியாமல் பின்பக்கமாக கொண்டு சென்றாள் அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. தன் நண்பன் என்பதை உறுதி செய்து அவனை கட்டி அணைத்தாள். அவனும் அவளைக்கண்ட ஆனந்தத்தில் கட்டிஅணைத்தான். இருவருக்கும் தங்களை சுற்றி ஏதோ ஒரு அமானுசியம் நடப்பதை புரிந்து இருவரும் வந்த பாதையை நோக்கி மிக வரைவாக மூச்செடுக்க ஓடி நுளைவாயிலுக்கு வெளியில் வந்து தங்களது துவிச்சக்கர வண்டியை எடுத்து வீடு வந்து சேர்ந்தனர்.
சிறிதா றோசன் வீட்டில் அன்று இரவு தங்கினாள். சிறிதா றோசனை பார்த்து நீ என்னுடன் வளிதவறவிட்டுவந்தாய் அல்லவா பிறகு எப்படி நீ அங்கு நின்றாய் என கேட்டாள். அதற்கு அவன் இல்லையே நான் உன்னுடன் வரவே இல்லை நீ என்னை அவ்விடத்தில் விட்டுவிட்டு சென்றாயே நான் வரவில்லையே என்றான். நடந்தவற்றை அவள் கூறினாள். றோசன் திகைத்துப் போனான். நாளை மறுநாள் இருவருமாக தெகிவளை மிருகக்காட்சிக்கு சென்று அதன் முகாமையயாளரினை சந்தித்து நடந்தவற்றை கூறினார்கள். அந்த இடங்களை நேரில் சென்று காட்டினார்கள். அதை கேட்ட அவர் அதை சாதாரணமான ஒரு வேடிக்கை நிகழ்வாக நினைத்து அவர்களை பார்த்து கேலிச்சிரிப்பு சிரித்தார்.
மறுநாள் இவ்வாறு ஒரு சம்பவம் இன்னும் இருவருக்கு நடந்தது அவர்களும் தப்பித்து வந்து நடந்தவவற்றை கூறினார்கள். அப்போதும் அவர் நம்பவில்லை. ஒரு நாள் இருவர் அந்த பிரதேசத்தில் இறந்துகிடந்தனர். அப்போது தான் அந்த முகாமையாளளர் இவர்கள் கூறியதை நினைவு கூர்ந்தார். இதற்கான காரணத்தை அறிய குழு ஒன்றை நியமித்து கடந்த காலத்தில் நடந்தவற்றை சேகரித்தார். ஒரு சிங்கம் நிறைய நாள் பசியுடன் வாழ்ந்தது என்றும் அது இவ்வாறு ஒரு ஆண்; பெண் நண்பர்களை இரையாக்கியது. என்றும் அதற்கு பிறகு இவ்வாறாக ஆண்,பெண் நண்பர்களை இவ் ஆத்மாக்கள் கொலை செய்து தம்முடன் சேர்க்கின்றன என்றும் அதில் தனியாக மாட்டியவர்கள் மட்டும் தப்பித்து உள்ளமையும் அம்பலமாகியது. அதன் பிறகு குறித்த அந்தப் பிரதேசமானது தெகிவளை மிருகக்காட்சிச்சாலையில் மக்கள் செல்லாதவாறு தடைசெய்யப்பட்டது.
Rtr. ஜசி பகீராதன்
![](https://i0.wp.com/rotaractarts.com/wp-content/uploads/2022/10/The-Ghoul-Game-5-1.jpg?resize=696%2C348&ssl=1)
Share this content:
Leave a Reply