பாரதிதாசன் பாரதியை பின்பற்றி ஆரம்பத்திலே பாடல்களை எழுதி வந்தாலும் பின்பு இந்தியாவிலே ஏற்பட்ட கடவுள் மறுப்புக் கொள்கை கடவுளை விட மனிதனே மேலானவன் ஆகிய திராவிட வேறுபாடு போன்ற அறிஞர் அண்ணாவின் கோட்பாடுகள் அவரை ஆட்கொண்டமையை அவரது பிற்காலப் பாடல்கள் வாயிலாக அறியலாம். இந்த வேறுபாட்டுத் தன்மையை வெளிப்படுத்துவதற்கு அவரது இளமைப்பருவத்தில் "எங்கெங்குங் காணினும் சக்தியடா-தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா" எனப் பாடத் தொடங்கினார். இது இவரது அறிமுகக் கவிதையாக அமைந்தது. (செல்வநாயகம். வி 1965 : 162) பிற்காலத்தில் அவரது கவிதைகள் கடவுள் மறுப்பு குறித்தான விடயங்களை அலசி ஆராயத் தலைப்பட்டன. " பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல்லாம் என்ன? இவை பாரத நாட்டுப் பழிச்சின்னத்தின் பெயர்த்தோழி ஆலயம் சாமி அழைத்தவர் யாரடி அறிவை இருப்பாக்கி ஆள நினைப்பவர் தோழா ஆண்மை கொள் ஏக பனிக்கு பரிந்தென்ன? அவர் அன்பெறும் நன்முரசு எங்கும் முழங்கினார் தோழா கோல நல்லாக குறித்தது தான் என்ன? கோயிலென்றால் அன்பு தோல் மனம் என்றார் தோழா! இந்த வரிசையில் தான் பாரதிதாசனின் "மானிடசக்தி" என்ற கவிதையும் அமைந்துள்ளதைக் காணலாம். இக் கவிதையில் உலகிலுள்ள அத்தனை…
மானிட சக்தி எமது பார்வையில்
