Tag: 2022

போதை இல்லாத உலகத்தை உருவாக்குவோம்

இன்றைய நவீன காலத்தை பொறுத்தவரையில் இந்த உலகத்தையே ஆட்டிப் படைக்கும் ஒரு ஆட்கொல்லியாக போதைப்பொருள் பாவனை காணப்படுகின்றது. இதனால் வரும் பேராபத்தை சிலர் உணர்ந்தும் பலர் உணராமலும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி தம்மை தாமே அழித்துக் கொண்டு வருகின்றனர். வயதானவர்கள்தான்போதைப்பொருட்களை பாவிப்பவர்கள் என்ற காலம் முடிந்து தற்பொழுது எந்தவொரு வயது வித்தியாசமும் இன்றி பெரியவர்கள், சிறியவர்கள், வாலிபர்கள், யுவதிகள், ஆண்கள், பெண்கள் என்ற எந்த ஒரு வேறுபாடுமின்றி மிகவும் சாதாரணமாக அனைவரும் இந்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளனர்.போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் தீமைகள் எண்ணிலடங்காதவையாக காணப்படுகின்றன.அதிலிருந்து மக்களையும், எதிர் கால இளைஞர் சமுதாயத்தையும் பாதுகாப்பது காலத்தின் தேவையாக காணப்படுகிறது. நமது இலங்கை நாடு உட்பட ஏனைய உலக நாடுகளிலும் பல்வேறுபட்ட வித்தியாசமான போதைவஸ்துகள் தயாரிக்கப்பட்டும் விற்பனைசெய்யப்பட்டும் வருகின்றன.உதாரணமாக மதுபானம், புகையிலை, ஹெரோயின், அபின்,கஞ்சா,போதையை ஏற்படுத்தும் தடுப்பூசிகள், போதையை ஏற்படுத்தும் மாத்திரைகள், தூள் வகைகள் என கூறிக்கொண்டே போகலாம் காலம் போக போக இன்னும் இன்னும் வித்தியாசமான போதைவஸ்துகள் தயாரிக்கப்படும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.இவ்வகையான போதைப்பொருட்கள் பல விதங்களிலும் பல வடிவங்களிலும் மக்கள் மத்தியில் நாளாந்தம் கைமாற்றம் செய்யப்பட்டும் விற்பனை செய்யப்பட்டும்…

Read more

இலங்கையின் கல்வி முறையின் குறைபாடுகளின் தாக்கம்.

கல்வி என்பது ஒரு மனிதனின் பிறப்பலிருந்து இறப்புவரை தொடர்ந்து செல்வதும்  அவனது வாழ்வில் முக்கியமான ஒன்று என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். இலங்கையானது அனைத்து வளங்களை கொண்ட நாடாக காணப்படினும் முன்னேற்றத்தை கண்டிராததற்கு பிரதான காரணமாக காணப்படுவது இலங்கையின் கல்வியின்  பல குறைபாடுகளாகும். எமது நாட்டில் அதிகளவான கல்வியானது ஏட்டுக் கல்வியும் புத்தகங்கள்  ஊடான கல்வியாகவும் காணப்படுகின்றதே தவிர ஒவ்வொரு பிள்ளையினதும் சுயதிறனை வெளிக்  கொண்டுவந்து அப்பிள்ளையின் எதிர்காலத்தை நவீன உலகிற்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கான  ஒரு சிறந்த கல்வி முறைமையை இலங்கை ஏற்படுத்தவில்லை என்பது பல காலமாக  காணப்படுகின்ற குறைபாடாகவே உள்ளது.  இலங்கையினைப் பொறுத்தவரையில் ஆரம்பக் கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி  அதற்கும் மேலாக தொழிற் கல்வி, முறைசாராக் கல்வி போன்றன நடைமுறைப்படுத்தப்படுகின்றன.  இருப்பினும் இக் கல்வி முறையானது இலங்கையின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதில்  எந்தவிதமான பாரியளவு பங்களிப்பினை செய்யவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்து  கொள்ள வேண்டிய உண்மை.  ஆரம்பக் கல்வி என்பது ஒரு பிள்ளையின் எதிர்காலத்தை தீர்மானப்பதற்கு  இன்றியமையாதது ஆனால் எமது நாட்டின் கல்விமுறைமையானது ஆரம்பக் கல்வியிலேயே  பிள்ளைகளை பரீட்சைக்கு தயார்செய்யத் தொடங்குகின்றார்களே தவிர தமது திறன்களை,  திறமைகளை பிள்ளைகள்…

Read more

Get-me! Got-ya!

As a team that comprises a set of individuals who love coming up with fresh ideas, and are consistent and passionate about what they do, we are eagerly waiting to work with every one of you while not compromising on that magical touch of fun. So, let’s all get on board and go get it!

Read more