மானிட சக்தி எமது பார்வையில்

பாரதிதாசன் பாரதியை பின்பற்றி ஆரம்பத்திலே பாடல்களை எழுதி வந்தாலும் பின்பு இந்தியாவிலே ஏற்பட்ட கடவுள் மறுப்புக் கொள்கை கடவுளை விட மனிதனே மேலானவன் ஆகிய திராவிட வேறுபாடு போன்ற அறிஞர் அண்ணாவின் கோட்பாடுகள் அவரை ஆட்கொண்டமையை அவரது பிற்காலப் பாடல்கள் வாயிலாக அறியலாம்.
இந்த வேறுபாட்டுத் தன்மையை வெளிப்படுத்துவதற்கு அவரது இளமைப்பருவத்தில் “எங்கெங்குங் காணினும் சக்தியடா-தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா” எனப் பாடத் தொடங்கினார். இது இவரது அறிமுகக் கவிதையாக அமைந்தது.
(செல்வநாயகம். வி 1965 : 162)
பிற்காலத்தில் அவரது கவிதைகள் கடவுள் மறுப்பு குறித்தான விடயங்களை அலசி ஆராயத் தலைப்பட்டன.
” பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல்லாம் என்ன?
இவை பாரத நாட்டுப்
பழிச்சின்னத்தின் பெயர்த்தோழி
ஆலயம் சாமி
அழைத்தவர் யாரடி
அறிவை இருப்பாக்கி
ஆள நினைப்பவர் தோழா
ஆண்மை கொள் ஏக
பனிக்கு பரிந்தென்ன?
அவர் அன்பெறும் நன்முரசு எங்கும்
முழங்கினார் தோழா
கோல நல்லாக
குறித்தது தான் என்ன?
கோயிலென்றால் அன்பு தோல்
மனம் என்றார் தோழா!
இந்த வரிசையில் தான் பாரதிதாசனின் “மானிடசக்தி” என்ற கவிதையும் அமைந்துள்ளதைக் காணலாம்.
இக் கவிதையில் உலகிலுள்ள அத்தனை சக்திகளை விடவும் மானிட சக்தி மேலானது மேம்பட்ட தன்மை கொண்டு வளர்ந்த வளர்ச்சியடைந்து வரும் சக்தி என்ற வகையில் இக் கவிதையின் கருப்பொருள் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாது மானிட சக்தி தான் எல்லாவற்றுக்கும் அடிப்படையானதும் மற்றைய சக்திகளின் இயங்குதளமாகவும் அமைகிறது என்கிறார் பாரதிதாசன்.
இதனை வரலாற்றியபின் அடிப்படையிலும் மானிடசக்தியின் மேலான தகைமைகளை விளக்க முற்படுகிறார் அவர். இதனை கூர்ப்புக் கொள்கையின் அடிப்படையில் விளக்குகிறார். மனிதன் ஆரம்பத்தில் விலங்கினங்கள் போல காடுகளில் அலைந்து திரிந்தவன் பின்பு கடல் கடந்து கண்டங்களை கைப்பற்றுமளவுக்கு அவனது ஆற்றல் வளர்ச்சியடைந்துள்ளது என்கிறார். இதனை அவர் “கானிடை வாழ்ந்ததும் உண்டு-பின்பு
வசப்படச் செய்ததும் அதுதான்” எனும் வரிகளில் வலியுறுத்துகிறார். அடுத்ததாக அவர் மானிட சக்திகளால் வையகத்திற்கு தன்னை முன்னுதாரணமாக்கியோர்களையும் தனது சக்தியில் இந்த வையகத்தினை ஆண்ட மன்னர்களின் உச்சத்தையும் மானிட சக்தியின் வல்லமைக்கு எடுத்துக் காட்டுகிறார். “மானிடத் தன்மையைக் கொண்டு பலர் வையகத்தை ஆள்வது நாம் கண்டதுண்டு” என்கிறார்.
மானிடத் தன்மையின் மேல் அவர் கொண்டுள்ள நம்பிக்கையை எம்மையும் கொள்ள வைப்பதற்கு அவரது வரிகளை அர்த்தமுள்ளதாகக் கையாண்டுள்ளார். உதாரணமாக
“மானிடன் வாழ்ந்த வரைக்கும்-இந்த
வையகத்திலே அவன் செய்த வரைக்கும்
மானிடத் தன்மைக்கு வேறாய்-ஒரு
வல்லமை கேட்டிருந்தால்
அதைக் கூறாய்!”
மானிடத்தின் சக்தியை விட ஒரு மேலான சக்தி வேறில்லை என்பதை அவரின் இவ்வரிகள் பசைசாற்றுகின்றன
தன்னுடைய கருத்தினை பிறருக்கு புரியவைப்பதற்கு ஏனைய கவிஞர்கள் போல அவர் பயன்படுத்தும் ஓர் அசைச்சொல்லே “தம்பி” என்பதாகும். இவ் அசைச்சொல்லே கவிதைக்கு மேலும் வலுவூட்டுகிறது. சில கவிஞர்கள் கண்ணே, சக்தி போன்ற கடவுள் பெயர்களையும் மானிடர்களை அன்பாக அமைக்கும் பெயர்ச்சொற்களையும் பயன்படுத்துவார்.
“வாங்கி விடடிகையையேடி கண்ணம்மா!
மாயமெவரிடத்தில்? என்று மொழிந்தேன்” என பாரதியார் பாடுவதை இங்கு காண முடியும்.
இதிலே இவரது அணிக்
கையாளுகைகளும் சிறந்தனவாக அமைவதைக் காண முடிகிறது. மானிட சக்தியின் சகலகலா வல்லமையை இவை பிரதிபலிக்கின்றன. இதில் “மானிடம் என்றொரு வாளும்
அதை வசத்தினில் அடைந்திட்ட உன்னிரு தோள்களும்” என்ற சீர்தனில் மானிட சக்தி வாளுக்கு உருவகிக்கப்படுகின்றது. “மானிடம் என்பது குன்று-தனில்
வாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று மானிடருக்கினிதாக இங்கு வாய்ந்த பகுத்தறிவாம் விழியாலே வான் திசையெங்கணும் நீ பார்” என்பதில் மானிடசக்தி குன்றாக உருவகிக்கப்படுவதோடு அதன் உச்சியானது மானிட சமத்துவ கருத்தியலுக்கு உருவகிக்கப்படுகிறது. அத்துடன் இங்கு மானிடனின் பகுத்தறிவு எனது விழிக்கு உருவகிக்கப்படுவதோடு அதனால் மானிட சமத்துவத்தை உலகில் நிலைநாட்ட வேண்டும் என்ற கருத்தியலை எம்மிடையே விதிக்கின்றது. இது மார்க்கிய சித்தாந்தத்தை விவரிக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளது.
இறுதியாக இக்கவிதையானது எனது பார்வையில் மானிட சக்தி மீது நம்பிக்கை கொண்ட மனிதனின் மேம்பாடு உச்சமானது என்பதை கவிஞர் உணர்த்துகிறார். பாரதிதாசனின் புரட்சி மிக்க கவிதைகளில் ஒன்றாக இதனைக் கண்டு கொள்ள முடியும். அது மட்டுமல்லாது “மானிட சக்தி என்பது புல்லோ அல்லது மரக்கட்டையை குறித்திட வந்த சொல்லோ?” என்பதன் மூலமாக அதனை இழிவாகக் கருதுதல் ஆகாது என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறார். ஆகவே மானிடசக்தியின் வல்லமையே உலகில் பெரியது என இக்கவிதையின் கருப்பொருள் சிறப்பிக்கப்படுகின்றது.
-Rtr. Sathiyakumaran Arunan
Share this content:
Leave a Reply