எனது ரோட்ராக்ட் பயணம்

எனது ரோட்ராக்ட் பயணம்

BY Rtr. Sathiyakumaran Arunan

நான் லியோ, ரோட்டராக்ட், கொழும்பு பீகான், ஸிரோ பிளாஸ்ரிக் போன்ற கழகங்களில்
பங்குபற்றியுள்ளேன். ஆனால் ரோட்ராக்ட் கழகத்தில் நான் இணைந்து பணியாற்றியது எனது அதிர்ஷ்டம் அல்ல… பேரதிஷ்டம்… எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தது அந்த
கழகத்தினால் தான். வேறுபட்ட பார்வைகள், அனுபவங்கள், இன்ப துன்பம், கோபம்,
வெறுப்பு என அனைத்தையும் அதில் கற்றேன்.


எனக்கு முதலில் ரோட்ராக்ட் கழகம் மீதான அபிப்பிராயம் சிறிதுமில்லை. ஆயினும் அந்த கழகத்தின் செயற்றிட்டங்களில் செயற்பட்ட அனுபவம் உண்டு. எனது நண்பி
மொபீதாவினால் தான் இந்த கழகத்தில் ஓர் அங்கத்தினராக இணையும் வாய்ப்பு கிட்டியது. அதன் பிறகு எனக்கு இனுர, நெத்ரூ, சமோதி, அவிந்தியா, பிரவீனா, இண்டீவரி, மிகிவமி, நெத்மி, ஸிய்னப், திடசரா, தெவ்மி, ரன்சலா, திசேனி, விஹாங்கி, பினரி போன்ற பல நண்பர்களின் அறிமுகமும் இனிமையான நீண்ட நாள் நட்பும் கிடைத்தது.


எனது பல்கலைக்கழக இரண்டாம் வருடத்தில் ரோட்ராக்ட் ஆண்டு 25/26 இல் மொபீதா
தலைமையிலான குழுவில் கொழும்புப் பல்கலைக்கழக கலைப்பீட ரோட்ராக்ட் கழகத்தின் இணை ஆசிரியர்களாக நானும் இனுரவும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். அதிலிருந்து எமக்கிடையிலான நட்பு மேலும் வலுவடைந்தது. நாம் சண்டையிட்டோம். சேர்ந்து பணியாற்றினோம். என எமது இனிமையான நட்பு நீண்டது. நாம் இணைந்து “caption chronicles” எனும் தலைப்பின் கீழ் caption எழுதுவதற்கான பயிற்சிப்பட்டறை ஒன்றை ஒழுங்கமைத்து சிறப்பாக நடத்தினோம். அதுமட்டுமல்லாது எனது படைப்பாக்கத்திறனை வலுப்படுத்துவதற்கான களமாக இந்த ரோட்ராக்ட் இணையத்தை உபயோகித்துக் கொண்டேன்.


இதைவிட எனக்கும் மொபீதாவுக்கும் இடையிலான நட்பின் ஆழமும் மேலும் வலுப்பெற்றது. நாங்கள் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்டோம். ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்தோம். சண்டை பிடித்தோம். பொங்கல் விழா செயற்திட்டம் தான் இந்த ரோட்ராக்ட் பயணத்தில் நான் மறக்க முடியாத ஓர் செயற்றிட்டமாக அமைந்தது. அந்த செயற்றிட்டம் stall உடன் முடிவடைந்து விட்டது. அது எனக்கு மிகுந்த கவலையை உருவாக்கியது. அதனால் நான் மொபீதாவுடன் வெகுவாக சண்டையிட்டேன். ஆனால் அவள் என் மீது கோபப்படுவதற்கு மாறாக என்னை சமாதானப்படுத்தினாள். அப்பிடியானதொரு நட்புறவை பெறுவதற்கு நான் செய்த பாக்கியம் தான் என்ன? நான் பல ரோட்டராக்ட் செயற்றிட்டங்களில் மொபீதாவினது தடையையும் மீறி பங்குபற்றியுள்ளேன்.


பைலா நைட்” செயற்றிட்டம் இடம்பெறும் தருணத்தில் தான் என் பால்ய சிநேகிதனின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அங்கிருந்த எனது ரோட்ராக்ட் நண்பர்கள் எனக்கு அருகிருந்து ஆறுதலளித்தனர். இதுதான் எனது பேரன்புமிகு நண்பர்களுடனான வண்ண மயமான ரோட்டராக்ட் பயணம்.

In lieu of the Membership Retention Month, Rotaractors at the University of Colombo, Faculty of Arts have submitted their creative work for the month of August under the theme “My Rotaract Journey”. These works reflect on the memories, trials and tribulations that our members encountered during their Rotaract experience.

Share this content:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *