என்றென்றும் நீங்கா அலைபாயும்  என்  பல்கலைக்கழகத்தின் நினைவுகள்

என்றென்றும் நீங்கா அலைபாயும்  என்  பல்கலைக்கழகத்தின் நினைவுகள்

என் வாழ்வில் நீங்கா அலைபாயும் நினைவு என்றால் அது பல்கலைக்கழகத்தின் நினைவினையே கூறலாம்.  என் பள்ளி கல்வியினை முடித்து விட்டு எனக்கு பல்கலைக்கழக் கழகம் கிடைக்குமா  அல்லது கிடைக்காத என்று ஆவலேடு காத்திருந்த தருவாயில் எனக்கு கொழும்பு பல்கலைக்கழகம் என்ற உன்னத  கல்வி நிறுவனம் இடைத்தது.இதுவே இலங்கையில் முதலாவது  பல்கலைக்கழகமாக வளங்குகின்றது. இப்பல்கலைக் கழகம்  என் அயலிலோ / என் அருகாமையிலே இல்லை. இதனை சென்றடைவதற்கு சுமார் பத்து மணித்தியாலங்கள் எடுக்கும். இவ்வாறான நீண்ட தூரத்தில் காணப்படும் பல்கலைக்கழகத்திற்கு எப்பொழுது  நான் முதன் முதலாக கலடி எழுத்து வைப்பேன் என்ற ஆவளோடு  காத்துக்கொண்டிருந்தேன்.

                                அந்த நாளும் வந்து விட்டது. அன்று நான் முதன் முதலாக  கொழும்பு  பல்கலைக்கழகம் என்ற நுழைவாயிலினை  நுளைகின்றேன். ஏறாளமான கனவுகளுடன் எனது  தந்தையாறின் வழிகாட்டுதலின் மூலம்  முதன் முதலாக நடக்க இருக்கும் நிலையறி பரிட்சையினை தோற்ற சென்றேன். இது வரை காலமும் எனது கிராமத்தில் ஒரே  இனம், ஒரே மொழி என்ற கலாச்சார பின்னணியில் பிறந்து வளர்ந்த நான் முதல் தடவையாக வேறு மொழி பேசும் நண்பர்களையும்,என்னிலும் நான் இருந்த சமுகத்தில் இருந்த நண்பர்களை பார்க்கிலும் அங்கு இருந்த நண்பர்கள் சற்று வித்தியாசமாக காணப்பட்டனர். இவர்களுடன் நான் உரையாடலை மெற்கொள்ள வேண்டுமென்றால் ஒன்று ஆங்கிலம் அல்லது சிங்களத்தில் உரையாடலை மேற்கொள்ள வேண்டும்.ஆனால் எனக்கோ அங்கிலம் என்பது ஒரு புரியாதா புதிராக காணப்பட்டது.மேலும் சிங்களம் எதை விட மோசமாக இருந்தது.இருப்பினும் எனது பல்கலைக்கழக நண்பர்கள் நான் ஒரு தமிழ் மாணவி என்பதை அறிந்து எனக்கு பல்வேறு உதவியினை செய்து தந்தனர்.

                             மேலும் அனைத்து நண்பர்களும் சுமுகமான முறையில் எங்களுடன் நட்பினை பகருவார்கள்.மேலும் எங்களது விரிவுரை மண்டபம் நாங்கள் இருக்கும் ஒவ்வொரு இடமும் ஒரு வகையான அனுபவத்தினையும்,பாடத்தினையும் கற்று தந்ததுஎனில் அது மிகையாகாது என்றே கூறலாம். நாங்கள் அனைவரும் அந்த பல்கலைக்கழத்தில் சுற்றி திரியாத இடங்களே இல்லை . நண்பர்களுடன் விடுதியில் கழித்த நாட்கள் ஒவ்வொன்றும் என் வாழ்வில் மறக்க முடியாத நினைவினை தந்தது என்றே கூறலாம். மற்றும் எனது தேவையின் நிமிர்த்தமும் , கட்டாயத்தின் பெயரிலும் ஆங்கிலம்  எனும் கசப்பு மருந்தினை ஒரு இனிப்பு மருந்தாக மாற்றியது இவ் பல்கலைக்கழகம் என்றே கூறலாம்.

                      குறிப்பாக சொல்லப் போனால் நான் எனது வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டவள்.இங்கிருந்து எங்களது Town க்கு  போக வேண்டும் என்றால் கூட நான் இன்னொருவரின் துணையுடனே இதுவரை காலமும் பயணித்துள்ளேன்.இப்பொழுது நான் எனது கிரமத்தில் இருந்து எங்கள் நாட்டின் தலைநகரத்திற்கு தனியாகவே  போய்வருகிறேன்  என்றால், அந்த துணிவினையும் தைரியத்தையும் ஏற்படுத்தி தந்தது இப் பல்கலைக்கழகம் தான் என்பது எக் காலத்திற்கும் அழியாத எந் ஆழ்மனதில் பதிந்த ஓர் கல்வெட்டாக காணப்படுகின்றது.

                         எனக்கு ஆரம்பத்தில் நிகழ்நிலை கல்வியின் முலமே அனைத்து விரிவுரைகளும் நடைபெற்றது. இது ஒரு வகையான அனுபவமாகவே காணப்பட்டது என்றே கூறலாம். இதிலும் ஓரு சிறப்பம்சம் யாதெனில் பல்வேறு இடத்தில் வசிக்கும்   ஒரு நட்பு வட்டாரம் உருவகியமையினை குறிப்பிடலாம்.முகம் தெரிய நண்பர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட பழக்கத்தினை கூறலாம்.இது எனது கலாச்சாரத்திற்கு  பழக்கமில்லாத விடயமாக காணப்பட்டாலும்   காலசூழ்நிலைக்கு அமைவாக பழக வேண்டியதாக காணப்பட்டது.குறுகிய காலமே எனது பல்கலைக்கழக படிப்பினை மேற்கொண்டு இருந்தாலும் எனது அனுபவமானது என்றென்றும் நீங்கா  நினைவினை தடம் பதித்துள்ளது   என்றே கூறலாம்.

Rtr. ஜெ. ஜெயப்பிரதா

Share this content:

Leave a Reply

Your email address will not be published.