சுவையான உப்புமா
பெயரை கேட்டாலே குழந்தைகள் முதல் பெரியோர் வரை வாய் ஊற வைக்கும் ஒரு உணவு என்றால் அது உப்புமா தான்…
என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு சுவை அனுபவத்தை தந்த உணவு என்றால் அது உப்புமா தான்.. நான் மட்டும் அந்த சுவையான உணவை சுவைத்தால் அது சுயநலம், என்னை சுற்றி உள்ளவர்களுக்கு அந்த ரெஸிபியை பற்றி கூறி அவர்களையும் சாப்பிட தூண்டுவது பொது நலம்…
வாங்க வாயூற வைக்கும் உப்புமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரவை-200கிராம்
- கடுகு -இரண்டு தேக்கரண்டி
- கடலைப்பருப்பு -இரண்டு தேக்கரண்டி
- உழுந்தம்பருப்பு – இரண்டு தேக்கரண்டி
- கறிவேப்பிலை
- வெங்காயம் – இரண்டு
- பச்சை மிளகாய் – மூன்று
- இஞ்சி – சிறிதளவு
- தண்ணீர் – இரண்டரை கப்
- உப்பு – தேவையான அளவு
முதலில் மிதமான சூட்டில் நன்றாக சூடாகும் வரை ரவையை வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு,உழுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து நன்றாக வதங்கவிட வேண்டும். உப்புமாவின் சுவையை அதிகரிக்க கடலைப்பருப்பு கொஞ்சம் அதிகமாக சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. பின்னர் அவை வதங்கிய பின் அதற்கு இரண்டரை கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் நெருப்பை குறைத்து ஏற்கனவே வறுத்து வைத்த ரவையை சேர்த்து நன்றாக கிளறுதல் வேண்டும். பின்னர் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி இளம் சூட்டில் அதனை இரண்டு நிமிடங்கள் வேகவிடவும். இரண்டு நிமிடங்கள் கழித்து அதனை ஒரு பீங்கானில் இடவும். நாவுக்கு ருசியான உப்புமா தற்பொழுது தயார்…
இந்த சுவையை உங்கள் நாவு சுவைக்க வேண்டுமா…தற்பொழுதே அடுக்கலை நோக்கி விரையுங்கள்… உப்புமாவை செய்ய துவங்குங்கள்…
Rtr. பாத்திமா ரிஸ்மினா
Share this content:
Leave a Reply