பெயரை கேட்டாலே குழந்தைகள் முதல் பெரியோர் வரை வாய் ஊற வைக்கும் ஒரு உணவு என்றால் அது உப்புமா தான்... என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு சுவை அனுபவத்தை தந்த உணவு என்றால் அது உப்புமா தான்.. நான் மட்டும் அந்த சுவையான உணவை சுவைத்தால் அது சுயநலம், என்னை சுற்றி உள்ளவர்களுக்கு அந்த ரெஸிபியை பற்றி கூறி அவர்களையும் சாப்பிட தூண்டுவது பொது நலம்... வாங்க வாயூற வைக்கும் உப்புமா எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் ரவை-200கிராம்கடுகு -இரண்டு தேக்கரண்டிகடலைப்பருப்பு -இரண்டு தேக்கரண்டிஉழுந்தம்பருப்பு - இரண்டு தேக்கரண்டிகறிவேப்பிலைவெங்காயம் - இரண்டுபச்சை மிளகாய் - மூன்றுஇஞ்சி - சிறிதளவுதண்ணீர் - இரண்டரை கப்உப்பு - தேவையான அளவு முதலில் மிதமான சூட்டில் நன்றாக சூடாகும் வரை ரவையை வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு,உழுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து நன்றாக வதங்கவிட வேண்டும். உப்புமாவின் சுவையை அதிகரிக்க கடலைப்பருப்பு கொஞ்சம் அதிகமாக சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. பின்னர் அவை வதங்கிய பின்…
சுவையான உப்புமா
