இனிப்பான இருள்

இனிப்பான இருள்

உலகில் நாம் கண்ட, காணாத, சுவைத்த, சுவைக்காத, அறியாத என பல வகையான உணவுகள் உண்டு. அதில் நாம் சுவைத்த அல்லது அறிந்த கேட்ட உணவுகளில் தமக்கென்று பிடித்த உணவுகள் இருக்கும். இதுபோல் எனக்கும் பிடித்த உணவு என்று ஒன்று இருக்கிறது. அது என்ன என்பதை கூறாவிட்டாலும் அதை எவ்வாறு செய்ய முடியும் அது எவ்வாறு இருக்கும் என்பதை நான் கூறுவேன் நீங்கள் அதைக் கொண்டு அந்த உணவு என்ன என்பதை கண்டுபிடியுங்கள்.

இருட்டு என்றாலே உங்களுக்கு பயம் அச்சம் நித்திரை என்பது தான் நினைவுக்கு வரும். ஆனால் சுவையான ஒரு இருட்டும் காணப்படுகிறது. முதன் முறையாக நான் இந்த உணவை உண்ணும் போது உணவே சொர்க்கம் என்று தான் என் மனதுக்கு எட்டியது. அந்த உணவை எவ்வாறு செய்வது என்று கூட தெரியாது இதற்கு முன் அதை சுவைத்தும் இல்லை அதை நான் எங்கும் பார்த்ததும் இல்லை இருந்தாலும் கூட அந்த உணவை நான் என் நாவை தொட்ட பொழுது அந்த உணவுடன் எனக்கு ஏதோ ஒரு நீண்டகாலத் தொடர்பு இருப்பது போல அந்த உணவு மீது எனக்கு என்று ஒரு தனித்துவமான உணர்வு இருப்பதாகவும் என் மனதுக்கு எட்டியது.

அதை உண்ணும் போது அந்த உணவிற்கு என்னென்ன சேர்த்து இருப்பார்கள் என்பதே என் மனதிற்கு எட்டியது. பின் உடனடியாக வீட்டுக்கு வந்ததும் அதன் ரெசிபியை பார்த்ததே செய்ய வேண்டும் என்று எண்ணினேன். பின் ஒரு நாள் விடுமுறை என்று அதை செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வந்து செய்ய ஆரம்பித்தேன்.

முதலில் கோதுமை மா, கொக்கோ பவுடர், உப்பு, சீனி, பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் என்பவற்றை ஒரு பெரிய பௌலில் இட்டு கலக்கிக் கொண்டேன்.  பின் முட்டை எண்ணெய் பால் என்பவற்றையும் அத்துடன் கலக்கிக் கொண்டேன். இவை எல்லாம் நன்றாக கலக்கும் வரை மிக்ஸ் செய்து கேக் தட்டில் திசு தாள் இட்டு அதில் கேக் கலவையை ஊற்றி பிரீ ஹிட் செய்யப்பட்ட oven இல் வைத்தேன்.

பின் கேக் தயாராகும் வரை icing செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்து வைத்தேன். 35 நிமிடம் முடிவடைந்தது. Cake um  பதமாக தயாராகி இருந்தது. அதை அப்படியே அழகாக தட்டில் வைத்து அலங்கரிக்க ஆரம்பித்தேன். சாக்லேட் கேக் என்பதால் வெள்ளை நிற icing கொண்டு Cake முழுமையாக மறையும் வரை icing seydhen. பின் wiping cream ஐ கொண்டு cake in மேல் புறம் frosting செய்து  அவற்றுக்கு இடை இடையே சுவையான  sour cheri பழங்களை வைத்து  இன்னும் அவற்றுக்கு இடையில் சாக்லேட் bar துண்டுகள் இட்டு அலங்கரித்து எனது Cake செய்யும் ஆசையை நிறைவேற்றி கொண்டேன்.

இதை வாசிக்கும் போதே நாவில் உமிழ்நீர் சுரந்திருக்கும். எனக்கும் recipe வாசிக்கும் போது அப்படி தான் இருந்தது. “பிளாக் ஃபர்ஸ்ட் கேக்” இது தான் இது வரை நான் உண்டதில்  சுவையான மற்றும் எனக்கு மிகவும் பிடித்த உணவு. நான் மேலே கூறிய recipe உம் இதற்கானதே. நான் செய்த போது suwai சரியாக வந்தாலும் தோற்றம் சற்று குழைந்து விட்டது.

எனவே உங்களால் கூட இது போன்று செய்து பார்க்க முடியும். செலவு என்றாலும் கூட பொருட்களை வாங்கி இதை செய்து இனிப்பான இருளின் சுவையை அனுபவிக்க மறந்து விடாதீர்கள்.

Rtr. சிராபா சித்தீக்

Share this content:

Leave a Reply

Your email address will not be published.