நினைத்தாலே இனிக்கும்…இனிப்பு பண்டம் என்றால் இது தான்

நினைத்தாலே இனிக்கும்…இனிப்பு பண்டம் என்றால் இது தான்

வாழ்க்கையில் எத்தனையோ சுவையான உணவுகளை இதுவரை நான் சுவைத்து  உள்ளேன். ஆனால்  என்னால் என்றுமே மறக்க முடியாத உணவு.

அப்படி என்ன உணவு என்று நினைக்கின்றீர்களா அது ஒரு இனிப்பு சுவையான உணவு “கேசரி”அதனை முதல் முதலாக என் சொந்தக்கார அக்கா 2015 அதனை தனது பிறந்த நாளின் போது உருவாக்கித் தந்தார். அன்று என் நாவில் முதல் முதலாக நுழைந்த அந்த சுவை இன்று வரை என்னை அதன் அடிமையாக்கி விட்டது.

இத்தகைய ஒரு அருமையான சுவையை நீங்களும் ருசிக்க விரும்புகின்றீர்களா? நான் எங்கு சென்றாலும் இதனை தேடி வாங்குவன்

மிகவும் இலகுவான செய்முறை கொண்ட ஓர் இனிப்பு பண்டம் தான் இது. நெய்யுடன் ரவை சீனி, கஜூ,பிளம்ஸ் சேர்ந்து தரும் சுகமே தனித்துவம்.

அதை நீங்கள் ஒரு முறை ருசித்தால் நிச்சயமாக கூறுவேன் யாரும் மறுக்கமாட்டீர்கள். அதுவும் என்னுடைய அக்காவின் கை பக்குவத்துடன் அது மிகவும் ருசியாக இருந்தது நான் அதை முதல் தடவையாக உண்ணும் பொழுது.

அதன் செய்முறையை அக்கா செய்யும் பொழுது அருகில் நின்று பார்த்தேன் உங்களிடம் அதனை பகிர்கின்றேன். அதன் சுவையை ஒரு தடவை சுவைத்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்

ஒரு கிலோ கிராம் ரவை ஒரு கிலோ கிராம் சீனி கேசரி பவுடர் சிறிதளவு 7 ரம்ளர்  கொதித்த நீர் தேவையான அளவு நெய் , மாஜரின் தேவையான அளவு  கஜு, பிளம்ஸ்
முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய்யில் ரவை மற்றும் கயூ பிளம்ஸ் என்பவற்றை பொன் நிறமாகவும் வரை வறுத்து தனித்தனியாக பாத்திரத்தில் இடவும். பின் சட்டியில் கொதித்த நீரை ஊற்றி அதனுள் தேவையான  அளவில் கேசரி பவுடர் மற்றும் சீனியை நன்றாக கலக்கவும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வறுத்த ரவையை சட்டியில் போட்டு இடைவிடாது கலக்கவும். இடையிடே நெய் மற்றும் மாஜரின் என்பவற்றை சேர்க்கவும். நெய் மற்றும் மாஜரின் ரவையுடன் நன்றாக  எண்ணை படரும் வரை இடைவிடாது கலக்கவும். நன்றாக சேர்ந்த பிறகு வறுத்த கயூ பிளம்ஸ் இனை சேர்த்து பின்னர் மாஜரின் பூசிய பாத்திரத்தில் கேசரியை இடவும். இப்பொழுது சுவையான கேசரி தயார். என் நாவில் ஊறிய சுவையை நீங்களும் ஒரு தடவை சுவைத்திடுங்கள். அனைத்து விதமான சுப நிகழ்வுகளுக்கு இதனை தயாரிப்பது சிறந்தது. எல்லோரையும் மகிழ்விக்கும்.

Rtr. ஜசி பகீராதன்

Share this content:

Leave a Reply

Your email address will not be published.