பட்டம்  சூட்டும் வைபவத்தில்  ஒரு  அமானுஷ்ய   சக்தி

பட்டம்  சூட்டும் வைபவத்தில்  ஒரு  அமானுஷ்ய   சக்தி

அன்று மார்கழி மாதம் எனது சட்ட கல்லூரிக்கான பட்டபடிப்புகள் அனைத்தும் நிறைவேறின . பட்டமளிப்புக்காண நாளும் மார்கழி இறுதி என்று நாள்  குறிக்கப்பட்டது. நானும் எனது குடும்பத்தினரும் சந்தோஷத்தின்  எல்லைக்கே  சென்று விட்டோம்.ஏனெனில் நான் இனிமேல் உயர்நீதிமன்றத்தில் ஒரு சட்டத்தரணியாக வழக்கு  உரைக்க போகின்றேன் என்று . நான் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த நடுத்தர வர்க்கத்துப் பெண் .நான் எனது படிப்பின் நிமிர்த்தம் அடிக்கடி கொழும்பு நகரத்திற்கு சென்று வந்துள்ளேன் .ஆனால் எனது குடும்பத்தினரோ நகர வாழ்வின் காற்றினை சுவாசித்ததே இல்லை. எனக்கு ஒரு உடன்பிறந்த தங்கையும் இருக்கிறாள். அவளோ முன்னர் ஒருபோதும் கொழும்பினை  தரிசித்தது இல்லை .மிகவும் ஆவலுடன் தனது ஆடைகளை தயார் செய்வதும் அழுத்துவதுமாக இருந்தாள். இவ்வாறு தான் எனது தாயாரும் காணப்பட்டார். நாங்கள் அனைவரும் எங்களுடைய கிராமத்தில் இருந்து தொடரூந்து வழியாக  கொழும்பு நகரத்தை நோக்கி சென்றோம் .தொடருந்து  கொழும்பு புறக்கோட்டையை  மறுநாள் அதிகாலையில் போய் சேர்ந்தது. பிறகு நாங்கள் அனைவரும் எங்களுடைய பொதிகளை தூக்கி கொண்டு ஒரு தனியார் விடுதியில் இளைப்பாறினோம். மறுநாள் காலையில் எனது பட்டம் சூட்டும் நிகழ்வு சர்வதேச பண்டாரநாயக்க நினைவு மண்டபத்தில் நடைபெறவிருந்தது .

நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் நன்றாக உணவருந்தி நீண்ட நேர உறக்கத்தை  எடுத்துக் கொண்டோம். ஏனெனில் மறுநாள் இந்நிகழ்விற்கு செல்ல வேண்டும் என்பதற்காக ,எனது தங்கைக்கு என் அம்மா சொல்லும் அறிவுரை  என் செவிகளுக்கு எட்டியது. இது என்ன பகலில் உள்ள சூரிய வெளிச்சம் போல இரவானது காணப்படுகின்றதே என இருவரும் மிகவும் பிரம்மிப்பாக இரவு பொழுதை கழித்தனர். இவர்களின் செயற்பாடுகள் மிகவும் மகிழ்ச்சியை தந்தது ஏனெனில் நான் இன்று எனது குடும்பத்தினரை இவ்வளவு தூரத்திற்கு கொண்டு வந்துள்ளேன் என்று .நான் அக மகிழ்ந்த அத் தருணத்தில்   அவ்வாறே மறு நாள் ஆனது .எனக்கு விடிந்ததே தெரியவில்லை, ஆனால் எனது வீட்டார் மிகவும் பரபரப்பாக எழும்பி  தமது கடமைகளை எல்லாம் செய்து விட்டு புது ஆடைகளை உடுத்தி மிகவும் ஆர்வத்துடன் தயாராக இருந்தனர். நானும் ஆயத்தம் செய்து கொண்டு எல்லோரும் சேர்ந்து புறப்பட்டோம் .எங்களை இவ்விடத்திற்கு எனது அப்பாவின் நண்பர் அவரது மகிழூந்தில் அழைத்துச் வந்தார். அவர் எங்களை கொழும்பு @BMICH இன் நுழைவாயிலில் விட்டு சென்றார்.அப்போது  இவ்வளாகத்தில் இருந்த நிறைய மக்கள் தொகையினர் கூட்டம் கூட்டமாக புகைப்படம் எடுப்பதும் குளிர்பானங்களை அருந்துவதுமாக  காணப்பட்டார்கள் .கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச  மண்டபத்திற்கு காலடி எடுத்து வைப்பது ஒரு புதிய உலகத்திற்குள் செல்வது போல் காணப்பட்டது .அவ்வாறே எனக்கான விடியலும்  பிறந்துவிட்டது என்று எனது குலதெய்வத்தை மனதில் நினைத்த வண்ணம் உள்ளே சென்றேன்.                    

அந்த இடமே பிரித்தானிய மகாராணி எலிசபெத் அவர்களின் மாளிகையை போன்று காணப்பட்டது எனலாம் .பட்டமளிப்பு வைபவம் சிறப்பான முறையில் ஆரம்பிக்கப்பட்டு ஒழுங்கான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அத்தருணத்தில்  @ BMICH இல் பிரதான வாயிலின் பின் கதவருகே ஒருவர் அசிங்கமான கோலத்தில் பார்ப்பதற்கு ஏதோ பிச்சைகாரனை போல் தோற்றம் அளித்தார்.நான் அவரை @BMICH இன் வாயிலின் நுழைவாயிலில் கண்டேன் .ஆனாலும் நான் அவரை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.மீண்டும் அவரை பார்த்த அத் தருணத்தில் எனக்கான பெயரும் கலாநிதி ,பேராசிரியர் திருமாறன்  அவர்களினால்  பரிந்துரைக்கப்பட்டது. நானும் எனது குடும்பத்தினரும் சென்று மிகவும் சந்தோசமான முறையில் அப்பட்டத்தைப் பெற்றுக்கொண்டோம் .மீண்டும் நான் எனது  ஆசனத்திற்கு வந்த போது  என் கண்ணில் பட்ட  அதே மனிதனின்  முகத்தோற்றம் தான் என் கண் முன்னே வந்தது .    பின்னர் எனது அருகில் அமர்ந்து இருந்த நண்பி கலா அவர்களிடம்   நான்  இதைப்பற்றி வினவியபோது ,அவளும் நானும் இதைத்தாண்டி கவனித்தேன் என்றாள் .திடீரென்று @ BMICH என் பின்புறத்தில் நின்ற மனிதர் முன் வாசலை நோக்கி விரைந்து வருவதை அவதானித்தேன் .                                                            

ஒரு புகழ்பெற்ற இடத்தில் இவ்வாறான ஒரு மனிதனா என்று யோசித்தேன். அந்த மனிதனும் முன் வாசலில் நின்றுகொண்டு சத்தமாக சிரிக்க தொடங்கிவிட்டார் அத்தருணத்தில் ஒரு பெண்மணிக்கு பட்டமளிப்பு நடந்துகொண்டிருந்தது அவளைப் பார்த்து அந்த மனிதன் மிகவும் உற்சாகமாக அதிக சத்தம் போட்டு சிரிக்க தொடங்கிவிட்டார். அரங்கில் இருந்த அனைவரும் இதனை வியப்பாகவே  பார்த்தவண்ணம் ஒதுங்கி நின்றார்கள் பாதுகாவலர்கள் மற்றும் மெய்க்காப்பாளர்கள் அவரை  அவ் இடத்தை விட்டு அகற்ற முற்பட்டனர். ஆனால் யாராலும் அவரை அவ்விடத்தை விட்டு நகர்த்த முடியவில்லை. நான் என்னவளை   கண்டுவிட்டேன் என்னிடமே வா என்று அந்த பெண்ணை நோக்கி அழைத்தார்.ஆனால் அந்தப் பெண்மணியோ பயத்தால்  உடல் எல்லாம் வியர்த்து  அழுதபடி ,தனது அப்பாவின் கையைப் பிடித்த வண்ணம் நின்றாள் .உடனடியாக அந்த நிகழ்வில் நின்ற உயர்ஸ்தானிகர் மூலம் பொலிஸ் அதிரடி படையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

அவ்விடமே அச்சத்தால் பரிதவிர்த்து போனது. பொலிஸ் அதிரடிப்படை அதிகாரி அவரிடம் அருகில் துப்பாக்கியை நீட்டி அவனிடம் சென்று நீ இப்பொழுது இவ்விடத்தை விட்டு உடனடியாக போகாவிட்டால், நான் உன்னை இவ்விடத்திலேயே சுட்டுப் பொசுக்கி விடுவேன் என்று உரத்த குரலில் கத்தினார். ஆனால் அம்மனிதன் பெரிய உருவம் பெரிய தாடி என்றவாறாக  உரத்த குரலில் சிரித்தார் .என்னை சுடு ஆனால் இவ்விடத்தில் இருப்பவர் ஒருவரும் உயிரோடு இந்த  நுழைவாயிலினை  விட்டு போக மாட்டீர்கள்  என்று, இவ்வாறு சொன்ன உடனே அந்த பொலீஸ் அலுவலரும் முன்னோக்கிய காலை சற்று மூன்றடி பின்னோக்கி வைத்தார் எல்லோரும் பயத்தின் உச்சத்திற்கே சென்று விட்டனர்  எனலாம். பெரிதாக சிரித்த வண்ணம் நானும் உங்கள மாறி பட்டம் எல்லாம் பெற்று ஒரு வைத்தியனாக வரவேண்டிய இளைஞன்.ஆனால்  நான் பல்கலைக்கழகத்தில் ஒரு தேவதையை  காதலித்தேன். அவள் சட்டத் துறையை சேர்ந்த மாணவி .

எனது காதல் ரோஜா பூவின் இதழ் போல நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது .அவ்வாறு நான்கு வருடங்களும் கரைபுரண்டது . என்னவளை  நான்கு வருடங்கள் முடிந்தவுடன் மணமுடிக்கும் ஆவலுடன் இருவரும் ஒருவருக்கொருவர் உயிராக இருந்தோம். அத்தருணத்திற்காக  காத்துக் கொண்டிருந்தோம் . நானும் அவளும் காதல் வசப்பட்டோம்  சேர்ந்து சுற்றித் திரிந்தோம் ,கூடி மகிழ்ந்தோம் . அவளுக்கும் பட்டமளிப்பு நாள் நெருங்கிவிட்டது. எனக்கும் நெருங்கி விட்டது. அவள் என்னிடம் வந்து சொன்னாள் எனக்கு @BMICH இல் தான் பட்டமளிப்பு விழா நான் நாளைக்கு எனது ஊருக்கு புறப்பட்டு செல்ல போகிறேன் வரும்போது எனது உறவினரைக்  கூட்டிக் கொண்டு வர வேண்டுமென்று . I MISS YOU DEAR, I AM COMING SOON. என்று சொல்லி விட்டுப் புறப்பட்டுச் சென்றாள். அவளும் போய்விட்டாள்,  எனது படிப்புக்கள்  அனைத்தும் நிறைவேறிவிட்டதால் ஊருக்கு  சொல்வோம்

என்று போய் விட்டேன் .பிறகு அவளுக்கும்  பட்டமளிப்பு நாள் நெருங்கிவிட்டது நானும் தொலைபேசியில் அவளை  அழைத்து வருவதாக கூறினேன். ஓம் நீங்களும் கட்டாயமாக எனது நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறினாள் . நீங்கள் அந்நிகழ்வில் இல்லையென்றால் நிகழ்வு எனக்கு முழுமை பெறாது ,அதனால் நீங்களும் கட்டயமாக வர வேண்டும் என்றாள்.நானும் சொன்னேன் கட்டாயமாக வருவேன் என்று.அந்த நாளும் வந்தது நானும் @BMICH க்கு சென்றேன் அவளுக்காக . ஆனால் அவள் அங்கு வரவே இல்லை. நானும் இங்கு தானே என்னவள் வருவாள் என்று  வழி மேல் விழி வைத்து ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தேன்.எல்லோரும் வந்தார்கள் ஆனால் என்னவளை மட்டும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் நான் அவளை தொலைபேசியில் அழைத்தேன் அழைப்பு துண்டிக்கப்பட்டது பின்னர் மீண்டும் அழைத்தேன்.

நீங்கள் அழைக்கும் நபர் இன்னொருவருடன் தொடர்பில்  இருக்கின்றார் தயவுசெய்து சிறிது நேரத்தின் பின்னர் அழைக்கவும் என்று வந்தது. மறுபடியும் விரைந்து அவரது தாயாருக்கும் தந்தைக்கும் அழைப்பை  ஏற்படுத்தினேன். என்னால் அவர்களின் அழைப்பையும் பெற முடியவில்லை. இந்த வானமே உடைந்து என் மேல் விழுந்ததைப் போல் நான் BMICH இன் வாயிலின் நுழைவாயிலின் கரையில் இருந்தேன் . இவ்வாறு அம்மனிதன் கூறிக் கொண்டு அருகிலிருந்த தண்ணீர் போத்தலை  எடுத்து தனது துப்பாக்கியால் சுட வந்த காவலாளியை நோக்கி எறிந்தார்.டேய் என்னால்  மட்டும் எவ்வாருடா தாங்கிக் கொள்வது எவ்வாறு இனிமேல் இந்த உலகில் வாழ்வது என்று சிரித்தபடியே கத்தினார்.

அங்கு இருந்தவர்களின் கண்களில் கண்ணீர் ஆறாக வழிந்தோடியது. இன்னும் இந்த மனிதர் என்ன செய்யப்போகிறான் என்ற பயமும் அவர்கள் மத்தியில் காணப்பட்டது .மேலும் அவன் தனது கதையை கூறினார் சரி எப்படியும்  அவள் வந்திருப்பாள் ஏதோ ஒரு அலுவலாக உள்ளே நிற்கின்றார் எப்படியும் குடும்பத்தோடு பட்டமளிப்பு முடிந்தவுடன்  இவ்வழியால்  வருவாள் நான் மிகவும் அவதானமாக கவனிக்க வேண்டும் என்று அவ்விடத்திலேயே கால்கடுக்க நின்று கொண்டிருந்தேன்.

பட்டமளிப்பு விழாவும் முடிந்துவிட்டது எல்லோரும் தங்களது வேலைகளை முடித்து விட்டு வீடு செல்கின்றார்கள் நானும் கூர்ந்து கவனித்தேன் ஆனால் அவள் வரவே இல்லை இருளும் சூழ்ந்த விட்டது .நான்  ஒரு பிச்சைக்காரனைப் போல அவ்விடத்திலேயே இரவை கழித்தேன்.  அவ்வாறு நாளும் கரைபுரண்டு ஓடின . ஒரு கிழமையும் முடிவாகிவிட்டது.எனது நண்பனின் தொலைபேசி அழைப்பு வருகின்றது . டேய் மச்சான் உன்ன காதலித்தவள் வேற கல்யாணம் செய்துட்டாள் மச்சி அதுவும் லண்டன் மாப்பிள்ளையாம், அதனால் நீ இதை எல்லாம் விட்டுட்டு

நீ உன் வேலைய பாருடா, திரிஷா இல்லனா நயன்தாரா மச்சான் தூக்கி போட்டுட்டு  போடா என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான். ஆனாலும் எனது மனம் கேட்கவில்லை என்னவள் அப்படி செய்திருக்க மாட்டாள் என்னை  தேடி வருவாள் என்ற மன உறுதியுடன் இருந்தான் . தனது காதலிக்கு “உனக்காக நான் நீ ஆசைப்பட்ட இடத்திலேயே கடைசிவரையும் காத்திருப்பேன்” என்று கூறி ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தான் இவ்வாறு அவன்  நள்ளிரவு பௌர்ணமி அவ்விடத்திலேயே உயிர் நீத்தான்.

அதன் பிறகு எனது ஆத்மாவும் சாந்தி அடையவில்லை. இவ்வழியில் பிச்சை எடுத்து  திரிந்த இந்த அப்பாவி மனிதனுக்குள் எனது ஆவியினை செலுத்தினேன்.எப்படியாவது என்னவளை கண்டு விடுவேன் என்று. அவ்வாறு சொல்லி கொண்டு   இன்று  கணத்த நாள்  எனக்கு தகுந்த நாள் , நான் இன்று என்னை  ஏமாற்றியவளை  சும்மா விடமாட்டேன் எல்லா பெண்களும் இவ்வாறு தான், அதுவும் சட்டம் பயின்ற பெண்கள் தான் இவ்வாறு சட்டத்தில் ஓட்டை போடுவார்.

கடைசியில் இங்குள்ள ஒரு பத்து  பெண்களயாவது  இரத்த பழிவாங்குவேன் என்று உரத்த குரலில் கத்தினான் . யாராலும் ஓடவும் முடியவில்லை அசையவும் முடியவில்லை அச்சத்தில் உறைந்து போய் விட்டனர். இச்சம்பவத்தை  கேள்விப்பட்ட பாதிரியார் ஒருவர் இடத்துக்கு விரைந்து வந்தார். அசிங்கமான தோற்றத்தில் காட்சியளித்த மனிதன் பின்வாங்க பட்டான். பாதிரியார் மனிதனுக்குள் இருக்கும் அமானுஷ்ய சக்தியை  விரட்ட அருகில் போனார் , உடனே கீழே விழுந்தான்  தொப்பென்று பாதிரியார் அம்மனிதனின்  தலையில் கையை வைத்து ஏதோ சொன்னார் பிறகு அம்மனிதன் ஒரு யதார்த்த வாதியாக எழுந்து எவ்வாறு நான் இவ்விடத்திற்குவந்தேன் ,யார் இங்கு அழைத்து வந்தது .சீ   இங்கு வந்ததால் எனது ஒருவேளை வயித்து  பிழைப்பு போய்விட்டதே என கூறி விரைந்து  பாதையை நோக்கி புறப்பட்டார். எனது தாயார் பட்டத்தைப் பெற்றுக் கொண்டு விட்டாய் இனிமேலும் நமக்கு இவ்விடத்தில் அலுவல் இல்லை என கூறிக்கொண்டு என்னை ஒரு கையில் இழுத்த வண்ணம் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டார் .அன்றிரவே நாங்கள் இரவோடு இரவாக கொழும்பு நகரத்தை விட்டு வெளியேறி தொடருந்தில்  அதே கிராமத்தை வந்தடைந்தோம் . இவ்வாறான அமானுஷ்ய சக்தியின், காரணத்தால் அந் நிகழ்வே ஒரு வித சங்கடத்தோடும் கவலையோடும் முடிந்தது.

Rtr. ஜெ.ஜெயப்பிரதா

Share this content:

Leave a Reply

Your email address will not be published.