மறக்க முடியாத சுவாரசியமான நாட்கள் மனதில் அலைபாயும் ஒரு இடமாக பல்கலைக்கழகம்.

பாடசாலை கல்வி முடிந்த பின் புதிதாக பல எதிர்பார்ப்புக்களுடன் காத்திருந்த நாட்கள் கை கூடி
பல்கலைக்கழகத்தில் நுழைந்த பொழுது எத்தனையோ அனுபவங்கள்ரூபவ் எத்தனையோ புதிய ஆச்சரியமான விடயங்கள் மனதில் ஆழமாக பதிந்த நினைவுகளாக உருமாறின. என் வாழ்நாளில் புதிய ஓர் இடத்தில் பல தெரியாத பல முகங்கள் மத்தியில் முதல் முதல் எனது சகாக்களுடன் உரையாடி உறவை நேர்முகமாக ஆரம்பித்த அந்த நாள் எத்தனை சகாப்தங்கள் ஆனாலும் மனதினை விட்டு விலகாது. ஏன் என்ற ஆச்சரிய கேள்வி உருவாகின்றதா? முதன் முதலாக வேறு மொழி பேசுகின்ற வேறு மதத்தினை தழுவிய நட்புக்களுடன் நட்பை ஆரம்பித்த நாள் அது.
ஓர் ஆண்டு காலமாக நிகழ்நிலையில் கல்வியை தொடர்ந்தாலும் கூட பல்வேறுபட்ட செயல்பாடுகள் பல
அனுபவங்களை என்னுள் பெற்றுத்தந்தது. ஆங்கிலத்திற்கும் எனக்கும் எட்டா பொருத்தம். ஆங்கிலத்தில் பேச எழுத தயங்கிய பொழுது நான் பேசும் மொழி புரியாத விரிவுரையாளர்கள் என்னை ஊக்குவித்தது பேசத்துணை
புரிந்தது என்றும் மறக்கமுடியாத விடயம். ஓவ்வொரு விரிவுரையாளர்களும் ஒவ்வொரு வகையான அனுபவக்
கல்வியினை பாடத்தினை தாண்டி கற்பித்து தந்தது. இன்று வரை பயனுள்ளதாக உள்ளது.
பல்கலைக்கழகத்தில் உள்ள நடைமுறைகள்ரூபவ் ஒழுங்கு முறைகள் என்பவற்றை முறையாக விளக்கப்படுத்திய மூத்த மாணவர்கள் வழிநடத்தல் இல்லாமல் பல்கலைக்கழகத்தில் எதையும் அறிந்து இருக்க முடியாது. இவர்களின் விளக்கப்படுத்தல்களுக்குப் பின்னரே பல்கலைக்கழகத்தில் அதுவும் கலைப்பீடத்தில் இவ்வளவு விடயங்கள் உள்ளதா என்பது வியப்புக்கு உள்ளாக்கியது. முதல் முதலாக நான் பங்கு பற்றிய போட்டி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விவாதப் போட்டி. இதன் ஊடாக எனது பீடம் தாண்டிய வேறு பீட மாணவர்களுடனான தொடர்பு கிடைத்தது. அத் தொடர்பு இன்று வரை என்னை பல்வேறு நிகழ்வுகளுக்கு ஒன்று சேர்த்தது. கற்றல் மட்டும் இல்லாமல் பல்துறை சார்ந்த விடயங்கள் ரூடவ்டுபடும் போது பல்வேறுபட்ட அனுபவங்கள் பெற்றுக்கொண்டேன். புல்வேறுபட்ட கலை நிகழ்ச்சிகள் ஒற்றுமையை பலப்படுத்தியது மட்டும் அல்லாமல் பல்வேறு திறமைகளையும் வெளிக் கொண்டு வந்தது. அது மட்டும் அல்லாமல் சிந்தித்து தெளிவான முடிவினை எடுக்கும் சிந்தனை வெளிவந்தது பல்கலைக்கழகத்தினுள் நுளைந்த பின்னரே.
ஏங்களது கலைப்பீட எமது ஆண்டு மாணவர்கள் மட்டும் சென்ற ஒரு சுவாரசியமான சுற்றுலா எவராலும்
என்றும் மறக்க முடியாது. கந்தானா மலை ஏறுவதற்கு நாங்கள் சென்று இருந்த போது பல எதிர்பார்க்காத
அனுபவங்கள்ரூபவ் எதிர்பாராத வலிகள் அதனுள் பிணைந்த எமது சக நட்பு. இதனால் பெற்ற அனுபவம் என்
வாழ்நாளில் நினைத்தாலும் மீண்டும் வரப்போவது இல்லை.
ஏங்களது கலைப்பீட எமது ஆண்டு மாணவர்கள் மட்டும் சென்ற ஒரு சுவாரசியமான சுற்றுலா எவராலும்
என்றும் மறக்க முடியாது. கந்தானா மலை ஏறுவதற்கு நாங்கள் சென்று இருந்த போது பல எதிர்பார்க்காத
அனுபவங்கள்ரூபவ் எதிர்பாராத வலிகள் அதனுள் பிணைந்த எமது சக நட்பு. இதனால் பெற்ற அனுபவம் என்
வாழ்நாளில் நினைத்தாலும் மீண்டும் வரப்போவது இல்லை.
பல்கலைக்கழகத்தில் வந்து மஞ்சள் மேசைப் பகுதியில் அமர்ந்து கலந்துரையாடும் போதுரூபவ் ஒரு
உணவுப்பொதியில் ஐந்து பேர் சாப்பிடும் போதுரூபவ் விரிவுரை அறையில் இடம் பிடிப்பதற்கு ஓடும் போதுரூபவ்
இலவசமாக பால் வாங்கிக் குடிப்பதற்காக கலைப்பீட பீடாதிபதி அறைக்கு கூட்டமாக செல்லும் போதுரூபவ் சக தோழிக்கு பிறந்த நாள் என்றால் ஒரு கேக் வாங்க காசு சேர்க்கும் போதுரூபவ் அந்த கேக் சாப்பிடுவதற்கு அடிபடும் போதுரூபவ் அடுத்த நாள் விளக்கவுரை செய்ய வேண்டும் என்றால் அந்த நாள் வந்து நீ இப்படி செய் அப்படி செய் என்று தயாராகும் போதுரூபவ் மதிய உணவு நேரம் என்றால் முதலில் ஓடி சென்று சிற்றுண்டிச்சாலையில் சாப்பாட்டு கோப்பையை எடுக்கும் போது வரும் சந்தோசங்களுக்கு அளவே இல்லை.இவை தந்த அனுபவம் எண்ணில் அடங்காதவை.
இவை மட்டும் அல்லாமல் விளையாட்டுக்கள் பலரூபவ் நடன நிகழ்வுகள்ரூபவ் பீடத்தில் துறைகளுக்கு இடையிலான பல்துறை போட்டிரூபவ் பல்கலைக்கழகத்தில் இடம் பெறும் அனைத்து மத கலாச்சார நிகழ்வுகள்ரூபவ் போன்ற பல் வேறுபட்ட விடயங்கள் திறமைகளை வெளிக் கொண்டு வருவது மட்டும் அல்லாமல். பீடத்தை தாண்டி சமூகத்தில் ஓர் அர்ப்பணிப்பு உணர்வை கொண்டு வருவதற்காகவும் மாணவர்களை வளப்படுத்துவதற்காகவும் இயங்குகின்ற லியோரூபவ் றொர்ரக் கழகம் மேற் கொள்ளும் செயற்பாட்டின் மூலம் பல்கலைக்கழகத்திற்கு வெளியில் மாணவர்களின் மதிப்பை அதிகரித்தது. எதிர்காலச் சமூதாயத்தை பற்றிய எண்ணம் எம்மிடையை வலுப்பெற்றது இதனூடாகவே.
தற்போது நான் கற்பது இரண்டாம் வருடம் ஆனால் இதற்குள் நான்பெற்ற ஒவ்வொரு அனுபவமும்
ஒவ்வொரு அழிக்க முடியாத நினைவுகளை தந்துள்ளன. என்னை முன்னோக்கிகொண்டுசென்று கொண்டு இருக்கின்றன. பல்கலைக்கழகத்தில் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் ஒவ்வொரு அனுபவத்தை மனதினில் விட்டுச்செல்கின்றது.
Rtr. ஜசி பகீராதன்
Share this content:
Leave a Reply