வாடகை வீடு

வாடகை வீடு

அவன் அந்த வீட்டிற்கு குடிபெயர்ந்ததில் இருந்து அங்கு நிகழும் அமானுஷ்யங்களை கண்டு பயந்து கொண்டிருக்கிருக்கிறான். அவன் தனது தொழில் நிமித்தமாக அங்கு குடிபெயர்ந்தான். அவனது காரியாலயத்திற்கு அருகிலும் குறைந்த வாடகையிலும்  கிடைத்ததால் அதை அவன் ஏற்றுக்கொண்டான். அவனுக்கு பேய், பிசாசு ஆகிய விடயங்களில் சற்று கூட நம்பிக்கையில்லை. அவனது பெற்றோர் எவ்வளவோ முறை எடுத்துக்கூறியும் அதற்கு செவிசாய்க்கவில்லை.

அவ்வாறே சில மாதங்கள் மாயமாய் மறைந்தன.

திடீரென ஒருநாள் அவன் வேலையை முடித்து வீடு திரும்புகையில் அவனது வீட்டு வாசலில் பல காகங்கள் கூட்டமாக இறந்து கிடைப்பதைக் கண்டான். சரியென்று தனது பாக்கை (Bag) உள்ளே வைத்துவிட்டு வெளியே வந்து அவற்றை ஒவ்வொன்றாக அப்புறப்படுத்த தயாரானான். அவற்றையெல்லாம் கஷ்டப்பட்டு அப்புறப்படுத்தி புதைத்து தானும் குளித்து விட்டு அங்குள்ள கதிரையில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டான். கதிரையிலேயே உறங்கியும் போனான். சிறிது நேரத்திற்கு பின் சுவர்க்கடிகாரத்தை பார்த்த போது அது பத்து மணியை உரசி நின்றது. அவன் எழுந்து இரவு உணவை தயாரித்து உண்டான். பாத்திரங்களை கழுவி வைக்கும் போது சமையலறையில் இருந்த எல்லா பாத்திரங்களும் கீழே விழுந்தன. அவற்றை பார்த்து பயந்த அவனுக்கு இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்தது. இரவு பன்னிரெண்டு மணியாகும் போது உள்ளே ஓர் பெண்ணின் அழுகுரல் கேட்டது.

-Rtr. Sathiyakumaran Arunan

Share this content:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *