புத்தகம் வாசிப்பது என்றால் யாருக்கு தான் புடிக்காது, அதிலும் பல அடுக்கு மாடிகளைக் கொண்டு அழகாக நேர்த்தியாக அமைந்திருக்கும் ஒரு நூலகத்தில் போய் அமர்ந்து புத்தகங்களை வாசிப்பதற்கு ஈடாக என்ன மகிழ்ச்சி இந்த உலகில் இருந்து விட போகிறது... புத்தகம் வாசிக்க கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு நண்பியுடன் சென்ற வேளை ஒரு வேடிக்கையான அனுபவம் கிடைத்தது அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அன்று விரிவுரைகள் முடிந்து நானும் எனது சக தோழிகளும் வெட்டி பேச்சு பேசியவர்களாக வந்து கொண்டிருந்தோம். வந்து கொண்டிருந்த வேளை எதேர்ச்சையாக என் கண்கள் நூலகம் நோக்கி விழ அன்று புவியியல் பாட விரிவுரையாளர் கூறிய ஒரு அறிவுறை சட்டென என் மனதை தட்டி சென்றது. அவர் கூறியதெல்லாம் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கான ஒரு பெரிய வளம் இந்த நூலகம் அதனை பயன்படுத்தி நீங்கள் உங்கள் அறிவை விருத்தி செய்யவில்லையெனின் நீங்கள் இந்த பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து இருக்கும் வெறும் பார்வையாளர்களே... உடனே ஒரு உதிப்பு என் மனதில் தோன்ற இது தான் சந்தர்ப்பம் இன்று சரி நூலகத்திற்கு போய் அமர்ந்து புத்தகங்களை வாசித்து, தேவையான புத்தகங்களை…